Breaking News

பள்ளிகள் திறப்பு பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு

அட்மின் மீடியா
0

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு..!

 


 கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விதிக்கபட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. 

 மேலும் மத்திய அரசு காட்ந்த ஜூன் மாதத்தில் இருந்து சில தளர்வுகளை அளித்து வருகிறது. 

இந்த மாதம் ஐந்தாம் கட்ட தளர்வுகளை அறிவித்தது அதில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக அக்டோபர்  15-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் 


தனிமனித இடைவெளி, ஆரோக்கியம், உடல்நலன் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

  • வகுப்புகளின்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் .


  • முழுநேர பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர், செவிலியர், மருத்துவர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் .


  • மாணவர்கள் , பெற்றோர்கள் , ஆசிரியர்களிடம் இருந்து அவர்களது உடல்நலன் குறித்து தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ள வேண்டும் .


  • பெற்றோர்களின் ஒப்புதலை பெற்று அவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்களை பள்ளிகளுக்குள் அனுமதிக்க வேண்டும் .


  • ஆன்லைன் வகுப்புகள் தேவையெனில் அதனை மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


  • பள்ளியில் வகுப்பறைகள், கழிப்பறைகள், பள்ளி வளாகம் உள்ளிட்டவை, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.


  • பள்ளிகளில் தனிமனித இடைவெளி அவசியம்



 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback