மூடநம்பிக்கையின் உச்சகட்டம்: வேலை கிடைத்ததால் 'நேர்த்திக் கடனாக' தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!
கன்னியாகுமரி மாவட்டம் எள்ளுவிளை பகுதியில் வசித்து வரும் செல்லசாமி என்பவரின் மகன் நவீன் (32). இவர் என்ஜினியரிங் படித்து முடித்த நிலையில், வேலை கிடைக்காமல் இருந்திருக்கிறார்.
இவருக்கு சிறிய வயதில் இருந்தே கடவுள் பக்தி அதிகம் என்பதால் வேலை கிடைத்தால் உயிரையே மாய்த்துக் கொள்வதாக வேண்டிக் கொண்டுள்ளார்.
இதையடுத்து வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், மும்பையில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவில் உதவி மேலாளராக சேர்ந்துள்ளார்.
பின்னர் தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக சொந்த ஊருக்கு வந்து தனது நேர்த்திக் கடன் பற்றி கடிதம் எழுதி வைத்த அவர் புத்தேரியில் ரயில்வே பாலத்தின் கீழ் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நவீன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்