நாளை வானில் தோன்றுகிறது 'புளூ மூன்' நீல நிலா என்றால் என்ன?
வானில்,'புளூ மூன்' தோன்றும் அரிதான நிகழ்வு நாளை நடக்க உள்ளது.வானில் நீல நிறத்தில் நிலா தோன்றப்போகிறது காண்பதற்கு தயாராக இருப்போம் என நீங்கள் நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும்
புளூ மூன் என்றால் என்ன?
புளூ மூன் என்ற சொல் ஒரு மாதத்தில் வரும் இரண்டாவது பவுர்ணமியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
அதாவது ஒரு மாதத்தில் இரண்டு தடவை பூரண சந்திரன் வானில் தோன்றினால் இரண்டாவது தடவை ஏற்படும் பூரண சந்திரன் Blue Moonன் எனப்படுவது மரபு.
இதற்கும் சந்திரனின் நிறத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை அதாவது நிலா நீல நிறத்தில் தெரிவதில்லை. மற்ற நாட்களை போலவே தெரியும். ஆனாலும், அறிவியல் ரீதியாக நீல நிலா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த மாதம் அக்டோபர் 1-ம் தேதி பவுர்ணமி வந்தது.
இரண்டாவது பவுர்ணமி, அக்., 31 இரவு, 8:19 மணிக்கு தோன்றுகிறது.
நிலவு தன்னைத் தானே ஒருமுறை சுற்றுவதற்கு, 29 நாட்கள் ஆகும் ஆனால் ஒரு மாதத்தில் 30 அல்லது 31 நாள் இருப்பதனால் சில சமயங்களில் பெப்ரவரி தவிர்த்து (28 நாட்கள்) ஏனைய மாதங்களில் இரண்டு தடவை பௌர்ணமி வானில் தோன்றும் சந்தர்ப்பங்கள் வரும். அப்படி ஒரு நிகழ்வே இந்த அக்டோபர் 31 இல் நிகழவுள்ளது.
இப்படி ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி ஏற்படும் நிகழ்வு சராசரியாக 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறையே ஏற்படும். இந்த அரிதான நிகழ்வே 'நீல நிலா' எனப்படும்
Tags: இந்திய செய்திகள்