AIADMK CM Candidate அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? இன்று அறிவிப்பு
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில் தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
அ.தி.மு.க. பொறுத்தவரை, சமீபத்தில் உயர்நிலை குழு கூட்டமும், செயற்குழு கூட்டமும் நடைபெற்றது.
இந்த தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்க வேண்டும் என்பது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் கோரிக்கை.
ஆனால் முதல்வர் வேட்பாளராக தாமே இருக்க வேண்டும் என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிலை.
முதல்வர் வேட்பாளர் தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக அதிமுகவில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் அதிமுக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் தனது ஆதரவாளர்களுடன் தனிதனியே ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் கூட்டாக அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க உள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்