Breaking News

7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

அட்மின் மீடியா
0

தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்கள் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய வட தமிழக மாவட்டங்கள் , புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் ,நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் 

அக்டோபர் 27,28 தேதிகளில், தென்தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback