Breaking News

உங்கள் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு GUIDELINE VALUE பார்ப்பது எப்படி?

அட்மின் மீடியா
0
நிலங்களை வாங்கவும் விற்கவும், செய்யும் பொழுது அரசுக்கு கட்ட வேண்டிய வரி முத்திரைத் தாளாய் வாங்குவோம். அப்படி முத்திரைத்தாள் வாங்குகையில் எவ்வளவு தொகைக்கு வாங்க வேண்டும் என்று இந்த வழிகாட்டி மதிப்பு படிதான் நாம் வாங்க வேண்டும் 


உங்கள் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு GUIDELINE VALUE பார்ப்பது எப்படி?என்று பார்ப்போம்

                                          

  • முதலில் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்தில் வழிக்காட்டி மதிப்பு தேடல் என்பதை தேர்வு செய்யவும்.

  • அடுத்ததாக அதில் உங்கள் நிலம் அமைந்து உள்ள மண்டலத்தை தேர்வு செய்யவும். அடுத்து சார்பதிவாளர் அலுவலகம் என்ற இடத்தில் உங்கள் நிலம் பதியப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை தேர்வு செய்யவும்.

  • அடுத்து உங்கள் நிலம் அமைந்துள்ள கிராமத்தின் பெயரை தேர்வு செய்யவும். அதன் பின்பு புலன் எண் என்ற இடத்தில் நீங்கள் நிலத்தின் மதிப்புக்கான விரும்பும் நிலத்தின் புலன் எண் மட்டும் பதிவு செய்யவும்.உட்பிரிவு எண் தேவை இல்லை. புலன் எண் பதிவு செய்த பிறகு சமர்ப்பிக்க என்ற பட்டனை அழுத்தவும்.இப்போது உங்கள் புலன் எண்ணுக்கான வழிகாட்டி மதிப்பு(GUIDELINE VALUE) வரும் அதை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback