FACT CHECK: டான்ஸ் நிகழ்ச்சியில்நடுவர்களை பாஜக தலைவர் மிரட்டினாரா ? உண்மை என்ன ?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பாஜக தலைவருடைய மகனாம் டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சி நொய்டாவில் நடந்ததில் பங்கு கொள்கிறார். நான் இதில் கண்டிப்பாக தேர்வாகவேண்டும் இல்லையென்றால் நடப்பதே வேறு என் தந்தை பெரிய ஆள் என்று நடுவர்களை மிரட்டுகிறார். இதற்கு பயப்படாத நடுவர்களில் ஒருவர் மைக்கை வாங்கி கொண்டு விரட்டி விடுகிறார். போனவன் தந்தையுடன் வந்து மேடையில் செய்யும் அலப்பறை தான் இந்த வீடியோ என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் நினைப்பது போல் அது உண்மையாக நடந்தது இல்லை அது ஒரு பிராங்க் வீடியோ
மேலும் அந்த வீடியோ கடந்த 27.06.2015 ம் ஆண்டு ஜீடிவி-யில் ஒளிபரப்பு செய்யப்பட்ட டான்ஸ்
இந்தியா டான்ஸ் சீசன் 5 இன் வீடியோவாகும்
அந்த வீடியோவின் முழு தொகுப்பு கீழ் உள்ள லின்ங்கில் உள்ளது அதில் 40 வது நிமிடத்தில் இருந்து பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ உள்ளது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி