Breaking News

FACT CHECK: நீர் தேர்வு பற்றி சுந்தர் பிச்சை கருத்து உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  நீட் எக்ஸாம் போன்ற ஒர தேர்வை எழுதியிருந்தால், என்னால் இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்திருக்க முடியாது. என் திறமைதான் என்னை வாழ்க்கையில் வெற்றிபெறச் செய்தது. நீட் என்பது திறமைசாலிகளை அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது சுந்தர் பிச்சை என்று  ஒரு செய்தியினை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பரவலாக வைரலாக பரவும் இந்த செய்தி சமூக வலைதளங்களில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பரவி வரும் வதந்தி ஆகும்

சுந்தர் பிச்சை அவர்கள் இது போல் கூறியிருந்தால் கண்டிப்பாக ஏதேனும் செய்தி வந்திருக்கும் ஆனால் இதுவரை நாம் ஆய்வு செய்ததில் எந்த ஒரு முண்ணனி செய்தி நிறுவனமும் இது போல் செய்தி  வெளியிடவில்லை,

மேலும் சுந்தர் பிச்சை அவர்களுடைய சமூகவலை தளங்களியும் நாம் ஆய்வு செய்தோம் இதுவரை அது போல் அவர் கூறியதாக எந்த செய்தியும் புலப்படவில்லை

ஆனால் இந்த செய்தி இந்திய அளவில் வைரல் ஆகி வருகின்றது .நம்மை போன்றே பல FACT CHECK இனையதளங்களும் இதற்க்கு மறுப்பு செய்தி பதிவிட்டுள்ளார்கள்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this