Breaking News

பிஎம்-கிசான் திட்ட மோசடி தொடர்பாக தகவல் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பிஎம்-கிசான் திட்ட மோசடி தொடர்பாக தகவல் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

பிஎம்-கிசான் திட்டம் என்பது விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் மிக பயனுள்ள திட்டங்களில் ஒன்று Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana திட்டம். இந்த திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி உதவியாக வருடத்துக்கு ரூபாய் 6,000/- வழங்கப்படுகிறது. ஆனால் விவசாயம் பார்க்காமல் நானும் விவசாயிதான் என்று பொய்யாக பதிவு செய்து கொண்டு ஏமாற்றி அரசு பணத்தை பெறுகின்றார்கள் .

இதுபோல் பலமாவட்டங்களில் இந்த மோசடி நடந்துள்ளது இந்த பிஎம்-கிசான் திட்ட மோசடி தொடர்பாக சிபிசிஐடி பிரிவு போலீஸார்விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் மோசடி தொடர்பாக வெவ்வேறு மாவட்டங்களில் 13 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த மோசடி குறித்து தகவல் அறிந்தோர், தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். அவர்களின் ரகசியத்தன்மை பராமரிக்கப்படும். சரியான தகவல்கள் அளிப்பவர்களுக்கு தகுந்த வெகுமதி அளிக்கப்படும். 


தொலைபேசி எண் 044-2851 3500,

ஃபேக்ஸ் எண் 044-2851 2510, 

வாட்ஸ்அப் எண் 94981 81035, 

மின்னஞ்சல் cbcid2020@gmail.com 

மூலம் தெரிவிக்கலாம்.

Tags: தமிழக செய்திகள்

Share this