Breaking News

FACT CHECK: பள்ளிகள் திறப்பு என பரவும் வதந்தி: உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள

அட்மின் மீடியா
0
சமூக வலைதளங்களில் பலரும்   தமிழகத்தில் வரும் செப்டம்பர் 14ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் மாணவர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் கட்காயம் அணிய வேண்டும்

திரையரங்குகள் அக்டோபர் 1ம் தேதி திறக்கப்படும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் இருக்கைகளும் சமூக இடைவெளி விட்டு இருக்க வேண்டும் தமிழகம் விரைவில் இயல்பான நிலைக்கு திரும்பும் K. பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சர்'


என்று தமிழக அரசு அறிக்கை போன்ற ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் இன்னமும் திறக்கப்படாமல் இருக்கின்றன. இதனால், மாணவர்கள் வீட்டில் இருந்தே படிக்கும் வகையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா கட்டுக்குள் வரும்வரை பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு தெளிவாக கூறிவருகிறது.

ஆனால் அசல் தமிழக அரசு அறிக்கை போல் பொய்யாக எடிட் செய்து பரப்பிவருகின்றார்கள்

அந்த செய்தி ஃபோட்டோ ஷாப் மூலம் எடிட்டிங் செய்யப்பட்டது ஆகும்

தமிழக அரசு இது போன்ற எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை அறிவிக்கவில்லை.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback