Breaking News

ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வது எப்படி..?

அட்மின் மீடியா
0
புதிய ரேஷன் கார்டுக்கு எப்படி விண்ணப்பம் செய்வது ?






முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்


அதில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க என்ற பகுதியை தேர்தெடுங்கள்

அதில் உங்கள் குடும்ப விவரங்கள் அனைத்தையும் கவனமாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யுங்கள்

அதில் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர்  மற்றும் முகவரி என அனைத்தையும்  தமிழ் மற்றும்  ஆங்கிலத்திலும் பூர்த்தி செய்யுங்கள்

அடுத்து உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமம் என  அதில் உள்ள பட்டியலில் தேர்ந்தெடுக்கவும்.   


அடுத்து அதன் கீழ் உள்ள உறுப்பினரைச் சேர்க்க என்ற  பொத்தானை அழுத்துங்கள், அதில் அனைத்து குடும்ப உறுப்பினர்களின்  விவரங்களையும் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்

அடுத்தாக குடும்ப அட்டை வகை குடும்ப அட்டை வகையைத் தேர்வு செய்யவும் 


அரிசி அட்டை , 

சர்க்கரை அட்டை என வேண்டியதை தேர்ந்தெடுத்து  கொள்ளுங்கள்


அதன் பின்பு  குடியிறுப்பு சான்று பதிவேற்றம் செய்யுங்கள்

ஆதார் அட்டை, 

வாக்காளர் அட்டை, 

எரிவாயு நுகர்வோர் அட்டை, 

வரி ரசீது, 

வாடகை ஒப்பந்தம்,

குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு விபரம், 

வீடு ஆவணம், 

மின்சார ரசீது, 

தொலைபேசி ரசீது, 

வங்கி கணக்கு புத்தகம், 

பாஸ்போர்ட், 

ஓட்டுனர் உரிமம், 

பான் அட்டை, 

வீட்டு வசதி வாரிய ஆவணங்கள், 

தபால் அடையாள அட்டை

ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும் 


அடுத்து

எரிவாயு இணைப்பு விவரங்களை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்


அவ்வளவுதான் இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும். 

விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும். 

அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback