Breaking News

இனி கொடைக்கானலுக்கு பேருந்தில் சுற்றுலா செல்ல இ பாஸ் தேவையில்லை

அட்மின் மீடியா
0
கொடைக்கானலுக்கு இனி இ- பாஸ் இன்றி சுற்றுலாப் பயணிகள் செல்லலாம் 



இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்


கொடைக்கானல் மலைப்பகுதிக்கு இனி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இ- பாஸ் இன்றி  பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் செல்லலாம்.

முதல்கட்டமாக வெள்ளி நீர்வீழ்ச்சி பூங்காவினுள் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

படிப்படியாக அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Share this