Breaking News

5 நிமிடத்தில் இலவச பான்கார்டு பெறுவது எப்படி? தெரிந்து கொள்ளலாம் வாங்க

அட்மின் மீடியா
0
5 நிமிடத்தில் உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எந்த ஒரு கட்டணமும் இல்லாமல்  உங்களுக்கான PAN Card-டை பெறுவது எப்படி என்று பார்ப்போம்



  • இடது புறத்தில் இருக்கும் Quick Links என்ற பகுதிக்கிழே Instant PAN Throught Aadhaar என்பதை  தேர்வு செய்யவும்.

  • அடுத்து  உங்களுக்கு இரண்டு தேர்வுகள் வரும் ஒன்று GET NEW PAN என்ற தேர்வும் இரண்டாவது CHECK STATUS / DOWNLOAD PAN என்ற தேர்வும் இருக்கும் . அதில் முதலில் GET NEW PAN எனும் தேர்வை தேர்வு செய்யவும்.

  • அதில்   முதலில் Please enter your Aadhaar Number for PAN Allotment என்ற இடத்தில் பான் கார்டு பெறவிரும்பும் நபரின் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்யவும்.

  • பிறகு Generate Aadhaar OTP என்ற பட்டனை அழுத்தவும்.

  • இப்போது உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணுக்கு ஒரு முறை கடவு சொல் வரும்  Please Enter Aadhaar OTP Received on Your Mobile Number என்ற இடத்தில பதிவு செய்யவும்.

  • அடுத்து  Validate Aadhaar Details என்ற பக்கம் வரும் அதில் உங்கள் விவரங்கள் வரும் அந்த விவரங்கள் சரியாக உள்ளதா என்று பார்க்கவும். சரியாக இருப்பின் கீழே உள்ள I Accept That எனும் இடத்தில் இருக்கும் டிக் box-யை டிக் செய்து விட்டு  Submit PAN Request என்ற பட்டனை அழுத்தவும்.

அடுத்து உங்கள் பான் எண்ணுக்குரிய Acknowledgement No வரும் அதனை குறித்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது நீங்கள் உங்கள் PAN Card Download செய்ய பத்து நிமிடம் காத்திருக்க வேண்டும்.பத்து நிமிடம் பிறகு திரும்பவும் e-Filing Web Site ஓப்பன் செய்யவும். அதில் Instant PAN Throught Aadhaar என்ற தேர்வை தேர்வு செய்து அதில் Check Status / Download PAN என்ற தேர்வை தேர்வு செய்யவும்.

இப்போது உங்கள் ஆதார் எண் மற்றும் Captcha Code enter செய்து Submit செய்யவும்.

இப்போது உங்கள் ஆதார் எண்ணுக்கு கொடுக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணுக்கு ஒருமுறை கடவு சொல் வரும் அதை பதிவு செய்து Submit என்ற பட்டனை அழுத்தவும்.

இப்போது உங்கள் PAN Card Download செய்வதற்க்கான Option வரும் , Download PAN என்று பட்டனை அழுத்தவும் 

இப்போது உங்கள் PAN Card Download ஆகிவிடும்.அதை ஓப்பன் செய்தால் கடவு சொல் கேக்கும் அங்கு உங்கள் பிறந்த தேதியே ஆதார் கார்டில் உள்ளவாறு பதிவு செய்யவேண்டும் அவ்வளவுதான் உங்கள் பான் கார்டு ரெடி

முக்கிய குறிப்பு :

நீங்கள் ஏற்கனவே ஆதார் எண்ணை பயன்படுத்தி பான் எண் பெற்றிருந்தால் இதன் மூலம் நீங்கள் இன்னொரு பான் எண் பெறமுடியாது.

ஆதார் எண் முக்கியம் , உங்கள் ஆதார் என்னுடன் உங்கள் கைபேசி எண்  இணைத்திருக்க வேண்டும். 

உங்கள் ஆதார் கார்டில் பிறந்த தேதி முழுமையாக அளித்திருக்க வேண்டும்

பான் கார்டு பெறவிரும்பும் நபருக்கு வயது 18 நிறைவடைந்திருக்க வேண்டும்.

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback