தமிழ்நாடு அரசு தோட்டக்கலையில் 2 ஆண்டு டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிகலாம்
அட்மின் மீடியா
0
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும்
சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்,
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் உள்ள காய்கறி மகத்துவ மையம்
ஆகிய இடங்களில் 2020- 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டு ஆண்டு தோட்டக்கலை பட்டயப் படிப்பில் சேர மாணவ-மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்விதகுதி:
இப்படிப்பில் சேருவதற்கு பிளஸ் 2 உயிரியல், தாவரவியல், விலங்கியல், வேளாண்மை கோட்பாடு மற்றும் செயல்முறை 1 மற்றும் 11 ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றினை விருப்பப் பாடமாக படித்து தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் ரூ.150/-ம் மற்ற பிரிவினர் ரூ.300-ம் இணையதளத்தின் வாயிலாக செலுத்தலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
21.09.2020
மேலும் விவரங்களுக்கு:
18004254444 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
Tags: கல்வி செய்திகள்