Breaking News

FACT CHECK: 5 ஏக்கர் நிலத்தில் சன்னி வக்ஃப் வாரியம் 'பாப்ரி மருத்துவமனை' கட்ட முடிவு செய்துள்ளதா?உண்மை என்ன

அட்மின் மீடியா
3
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  #நீதி மன்றத்தின் ஆனையின்படி அநியாயமாக இடித்த #பாபர் மசூதிக்கு பகரமாக #முஸ்லிம்களின் வஃக்பு வாரியதிற்கு கிடைக்கும் #ஐந்து ஏக்கர் நிலத்தில்  பிரம்மாண்டமான  #பாபர் மருத்துவமனை கட்ட வாரியம் முடிவு...இலவசமாக செயல்படும் இந்த மருத்துவமனை நிர்வாகிக்கும் பொருப்பு மற்றும் தலைமை மருத்துவராக டாக்டர் #கபில்கான் அவர்களை நியமனம் செய்யபடும் ...
AIIMS மருத்தவ மனையைவிட பிரம்மாண்டம் செயல்படுத்த வஃக்பு வாரியம் முடிவு...!! என்று  ஒரு செய்தியினையும் ஒரு மருத்துவமனையின் புகைப்படத்தையும் பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

உத்தரபிரதேசத்தின் சன்னி வக்ஃப் வாரியம் அந்த தகவலை முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் பொய்யானது என்று கூறியுள்ளது. 

2019 நவம்பரில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் , அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக சுன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு மையத்திற்கு உத்தரவிட்டது. 



அதன் பின்பு 15 உறுப்பினர் கொண்ட இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையை சமீபத்தில் உ.பி. சுன்னி வக்ஃப் வாரியத்தால் உருவாக்கப்பட்டது. 

அந்த அறக்கட்டளையின் பதிவு வேலைகள் முடிந்துவிட்டது மேலும் பான்கார்டு வங்கி கணக்கு துவங்குவது போன்ற வேலைகள் நடந்து வருவதாகவும் அதன்பின்பு அறக்கட்டளை உறுப்பினர்கள் விரைவில் கூடி உச்சநீதிமன்றம் வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில் கட்டுமானம் குறித்து இறுதி முடிவுகளை வெளியிடுவார்கள். இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை தெரிவித்துள்ளது

பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் 

அமெரிக்காவில் உள்ள University of Virginia வின் UVA HOSPITALன் புகைப்படம்  ஆகும்

அந்த போட்டோவை எடுத்து போட்டோஷாப் பயன்படுத்தி தவறாக பரப்பி வருகின்றார்கள்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்



அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்



அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்



அட்மின் மீடியாவின் ஆதாரம்
Sunni Waqf board decided to build Babri hospital on the 5 acre land allotted in Ayodhya?

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback

3 Comments