BREAKING NEWS: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அட்மின் மீடியா
0
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் கடந்த 2018 ம் ஆண்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது .
வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது சென்னை உயர்நீதிமன்றம். வழக்கினை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
Tags: தமிழக செய்திகள்