Breaking News

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் நடைமுறை இன்று முதல் அமல்!

அட்மின் மீடியா
2
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. 


இதில், இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும்போது அதிக அளவில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில் இந்த நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும், இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். 

இதன்படி, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் வழங்கும் புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனை அடுத்து இன்று அதிகாலை முதல் இபாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது

நீங்கள் இ பாஸ் விண்ணப்பிக்க:



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback

2 Comments