Breaking News

ஊட்டி மலர் கண்காட்சியினை உங்கள் மொபைலில் virtual showவாக பார்க்கலாம் வாங்க...

அட்மின் மீடியா
0
தற்போது ஊட்டி மலர் கண்காட்சி யின் இன்பச் சுற்றுலா உங்கள் மொபைலில் இ பாஸ் இல்லாமல் பார்க்கலாம் வாங்க...


கொரானா பரவலை தடுக்க ஊரடங்கினால் உலகத்தையே புரட்டிப் போட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்திருக்கிறது. ஊரடங்கால் சுற்றுலாதளங்கள் மக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றது

இந்நிலையில் ஊட்டியில் இந்த ஆண்டு மே மாதம் 15-ம் தேதி தொடங்கி 5 நாள்கள் மலர்க் கண்காட்சி நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு, அதற்கானபணிகள் பல மாதங்கள் முன்னதகவே தொடங்கிவிட்டன. ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டிருப்பதால் உதகையின் 124-வது மலர்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.

ஊட்டி மலர்கண்காட்சியினை  தொழில்நுட்ப வசதிகளால் மக்கள் வீட்டிலிருந்தே  கண்டு ரசிப்பதற்காக மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளால், பூங்கா முழுவதும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அவை மெய்நிகர் காட்சிகளாக அதாவது virtual flower showவாக உருவாக்கப்பட்டுள்ளது.

 எனவே இந்த ஆண்டு உதகை தாவரவியல் பூங்காவின் மலர்க் கண்காட்சியை அனைவரும் வீடுகளில் இருந்தே கண்டு களிக்கலாம்.

நீங்கள் செய்யவேண்டியது  உங்கள் மொபைலை Landscape mode மாற்றி விட்டு Screen ஐ தொடாமல் தொடர்ந்து பாருங்கள் லேப்டாப் அல்லது கணினியில் பார்ப்பது அற்புதமாக இருக்கும்


அப்பறம் என்ன உங்க வீட்டுகுட்டிஸ் மற்றும் உங்கள் உறவினர்களுக்கு உடனே ஊட்டி மலர் கண்காட்ட்சியினை சுற்றி காட்டுங்க....


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback