Breaking News

FACT CHECK: டாக்டர் கபில்கான் விடுதலை என்ற செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  டாக்டர் கபில்கான் விடுதலை என்று  ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

மருத்துவர் கபில்கான் அவர்கள்  உத்திர பிரதேசம் அலிகார் பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசியதாகவும், மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாகவும் உத்திர பிரதேச அரசு அவரை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும்  அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்னும்  சிறையில் தான் இருக்கிறார்

மேலும் உத்திர பிரதேச மாநிலத்தில், கோரக்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக 60 க்கும்மேற்பட்ட குழைந்தைகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக, டாக்டர் கபில் கான் மற்றும் தலைமை மருத்துவர் ஆர்.கே.மிஸ்ரா ஆகியோர் உட்பட 7 பேர் மீது, அலட்சியம், ஊழல், கடமையை சரியாக செய்யவில்லை என 3 பிரிவிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கடந்த 02.09.2017 அன்று கைது செய்யபட்ட டாக்டர் கபில் கான்  9 மாத சிறை தண்டனை பிறகு 28.04.2018 ம் ஆண்டு  ஜாமீனில் வெளியவந்தனர்.  அப்போது எடுக்கபட்ட வீடியோவை புகைபடத்தை எடுத்து தற்போது விடுதலை என பரப்புகின்றார்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



அட்மின் மீடியாவின் ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback