FACT CHECK:சிறுவனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவை : என பரவும் செய்தியின் உண்மை என்ன???
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சிறுவனுக்கு விபத்தில் கண் பாதிப்படைந்து விட்டது அறுவைசிகிச்சைக்கு ரூ.8 லட்சம் தேவைப்படுவதாகவும், இந்த பதிவை ஷேர் செய்தால் ரூ.1 கிடைக்கும் என்று சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவினை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை தன்மை அறிய அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது ஆகும்
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
சமூக வலைதளங்களில் மெசஜ் ஷேர் செய்வதால் கூகுள், வாட்ஸப், பேஸ்புக், டிவிட்டர், போன்ற எந்த ஒரு நிறுவனமும் பணம் கொடுப்பதில்லை
ஷேர் செய்யப்படும் புகைப்படங்களுக்கு கிடைக்கும் லைக்ஸ், ஷேர் அளவைப் பொறுத்து ஃபேஸ்புக் நிதி உதவி அளிப்பது இல்லை.
சற்று நன்றாக சிந்தித்து பாருங்கள் நீங்கள் தினமும் சமுகவளைதளத்தில் நூற்றுக்கணக்கான செய்துகளை அனுப்புகின்றிர்கள் அதற்க்கு ஏதாவது உங்கள் கணக்கில் பனம் வந்து உள்ளதா
அல்லது 1ஜிபி 2 ஜிபி டேட்டா அதிகரித்து உள்ளதா ...மாதம் மாதம் நீங்கள் உங்கள் மொபைல்க்கு ரிசர்ஜ் செய்து கொண்டு தானோ இருக்கின்றிர்கள்
எனவே பொய்யான செய்தியினை யாரும் ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி