Breaking News

ஆன்லைன் வகுப்பு கிடையாது; டிவி மூலமாக வகுப்பு! - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

அட்மின் மீடியா
1
தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவலை கட்டுபடுத்த கடந்த  மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகள் இயங்கவில்லை மேலும் 1 முதல் 10 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.



மேலும் பல தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தொடங்கிவிட்டார்கள் ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான எந்த ஏற்பாடும் செய்யாமல் இருந்து வருகின்றது

இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்,

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது என்றும் தொலைக்காட்சி  வழியாகபாடம்  நடத்தவே திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தொலைகாட்சி மூலம்  வகுப்புக்காக 3 தொலைக்காட்சிகள் தயார்நிலையில் உள்ளன


Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback

1 Comments