இந்துஸ்தான் பல்கலை கழகத்தில் பொறியியல் படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் நுழைவுத் தேர்வு: இந்துஸ்தான் பல்கலை. அறிவிப்பு
2020-21 கல்வியாண்டில் பி.டெக்., பி.ஆர்க், பி.டிஸ் (டிசைன்) உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 5 தொடங்கி 7-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. மேலும் இத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுகிறது.
இணையதளத்தில் விண்ணப்பிக்க:
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.07.2020
இந்துஸ்தான் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம் (HITS), கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக கல்வி திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது.
கொரோனா தடுப்புப் பணியின்போது உயிர்நீத்த பணியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு இலவச தங்குமிட வசதியும் கல்வி உதவித் தொகையுடன் கல்வி பயிலும் வசதி செய்து தரப்படும் என அறிவித்துள்ளது.
மேலும், கொரோனா தடுப்புப் பணியில் முன்னணியில் நின்று செயல்படும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், அரசு அதிகாரிகள் யாராவது பணியின்போது உயிரிழந்து விட்டால் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். என அறிவித்துள்ளது
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்