Breaking News

இலவச கல்வி திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - சென்னை பல்கலை கழகம் அறிவிப்பு

அட்மின் மீடியா
1
சென்னை பல்கலைக்கழகம் சார்பில் இலவச கல்வி திட்டத்தின் கீழ் படிக்க பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இளநிலை பட்ட படிப்புகளில் சேர்வதற்க்காக விண்ணப்பிக்கலாம் 

எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, 
காஞ்சிபுரம், 
செங்கல்பட்டு, 
திருவள்ளூர் 
ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பின் கீழ் வரும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தகுதிகள்:

முதல் தலைமுறையாக உயர்கல்வி பயில வரும் மாணவர்கள், 

கூலி வேலை செய்யும் பெற்றோரின் பிள்ளைகள் 

பெற்றோரை இழந்த பிள்ளைகள் 

கணவனால் கைவிடப்பட்ட மற்றும் விதவைப் பெண்களின் பிள்ளைகள் 

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

விண்ணப்பிக்க:



தேவையான ஆவனங்கள்:

பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (கட்டாயம்)

பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (கட்டாயம்)

வருமான சான்றிதழ்  (கட்டாயம்)

மாற்றுத்திறனாளி சான்றிதழ்  பொருந்தினால்

ஆதரவற்ற மாணவர் சான்றிதழ் - பொருந்தினால்

முதல் பட்டதாரி சான்றிதழ்-பொருந்தினால்

கணவரால் கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் -பொருந்தினால்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 

07.08.2020

மேலும் விவரங்களுக்கு:

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback

1 Comments