Breaking News

சவுதியில் 3 மாதத்திற்கு விசாவை இலவசமாக நீட்டித்து மன்னர் சல்மான் உத்தரவு

அட்மின் மீடியா
0
சவுதியில் வெளிநாட்டினரின் இகாமா மற்றும் சவுதியில் உள்ள வெளிநாட்டினரின் சுற்றுலா விசா ஆகியவை செல்லுப்படியாகும் கால அளவை மேலும் 3 மாதங்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி நீட்டித்து மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

சவூதியில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் காலாவதியான ரெசிடென்ஸ் பெர்மிட் (Iqama) மற்றும் வெளிநாட்டினரின் Exit and Re-entry விசாக்களை மூன்று மாதங்கள் இலவசமாக நீட்டிப்பு செய்வதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, இதே போன்று காலாவதியான விசா வைத்திருந்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவசமாக விசா நீட்டிக்கப்படும் என அறிவித்து அவர்கள் அனைவரின் விசாக்காலமும் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


source:

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback