Breaking News

ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் கல்வி கட்டணத்தில் 40%மும், 2 மாதங்களுக்கு பிறகு 35%மும் வசூல் செய்ய தனியார் பள்ளிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

அட்மின் மீடியா
1
தனியார் பள்ளிகள் 75% கல்விக் கட்டணத்தை 2 தவனைகளில் வசூலிக்கலாம்" - என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !




கொரானா வைரஸ் பரவலை தடுக்க நம் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால்  பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றே தெரியவில்லை இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்படுகின்றது

தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.வழக்கின் முந்தையை விசாரணையில் தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி தமிழக அரசு, 75% கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதி அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த மாண்புமிகு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள்

முதல் தவணையாக 40 % ஆகஸ்ட் 31க்குள் பள்ளிகள் வசூலிக்கலாம். என்றும்

இரண்டாம் தவணையான 25% 2 மாதங்களுக்கு பிறகு வசூலிக்கலாம் எனவும்

இந்த உத்தரவு அரசு உதவிபெறாத அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்" என்றார்.மேலும்  மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு பொருந்தும் மேலும் இது தொடர்பான வழக்கு அக்டோபர் 5 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது" என உத்தரவிட்டார் மாண்புமிகு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் உத்தரவிட்டார்

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback

1 Comments

  1. 4g set phone Ellai.eppadi padippathu.eppadi fees koduppathu.Varumanamum Ellai

    ReplyDelete