FACT CHECK: ஒபாமாவை சந்திக்க சென்ற டிரம்ப் கொடுத்த பரிசு பொருளை தூக்கி எறிந்தாரா ஒபாமா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் டிரம்பு தனது மனைவியுடன் சென்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு பரிசுப் பொருள்களை வழங்கி சாந்தப் படுத்தி கருப்பர் இன மக்களின் கோபத்தை குறக்க சந்திக்க சென்றார். ஆனால் அவருக்கு ஏமாற்றம் காத்திந்தது. ஒபாமா
அதை வாங்கிகோபத்துடன் வீசி எறிந்தார்.என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது ஆகும் அதன் அசல் வீடியோ கீழே கொடுக்கப்ட்டுள்ளது
பாரக் ஒபாமா அவர்கள் தன் பதவி காலம் முடிந்த பிறகு வெள்ளை மாளிகையை காலி செய்தார் அப்போது டொனால்ட் டிரம்ப் அவர்கள் ஒபாமாவை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வந்தார். அப்போது டிரம்ப் அவர்களின் மனைவி மெலினா ஒபாமா அவர்களின் மனைவி மிச்செல்ல்க்கு பரிசு ஒன்றை கொடுத்தார்.
அந்த பரிசை வாங்கிய ஒபாமா பின்னால் சென்று தனது பணியாளரிடம் கொடுக்கின்றார் மீண்டும் வந்து டிரம்ப்புடன் நிற்கின்றார்
இந்த நிகழ்வு கடந்த 20.01.2017 அன்று நடந்தது
ஆனால் சிலர் அந்த வீடியோவை எடிட் செய்து தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவின் அசல்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி