Breaking News

FACT CHECK:வடநாட்டில் புரட்சி வெடித்து விட்டது. அமித்ஷா சென்ற வாகனத்தில் பீகார் மக்கள் கல்லெறிந்து விரட்டினார்கள்.என்ற வீடியோ உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் வடநாட்டில் புரட்சி வெடித்து விட்டது. அமித்ஷா சென்ற வாகனத்தில் பீகார் மக்கள் கல்லெறிந்து விரட்டினார்கள். என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் தகவலில் அமித்ஷா என்று கூறுவது போல் அந்த சம்பவத்திற்க்கும் அமித்ஷாவிற்க்கும் சம்மந்தம் இல்லை மேலும் அந்த சம்பவம் தற்போது நடந்தது இல்லை

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 28.01.2018 அன்ற பீகாரில் நடந்தது
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவர்களின் பாதுகாவலர்களின் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்

தங்கள் பகுதியில் அரசு திட்டங்கள்  சரியாக வளர்ச்சியடையாத காரணத்தால் அப்போது சில சமூக விரோதிகள் முதல்வரின் காரில் கற்களை வீசினார்கள் என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று பொய்யாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this