Breaking News

FACT CHECK ; டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடையா?: வைரல் அறிவிப்பாணை உண்மையானதா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  டிக்டாக் உள்ளிட்ட பல சீன தயாரிப்பு மொபைல் செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்க, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தகவலியல் மையம் சுற்றறிக்கை அனுப்பியதாக ஒரு அறிவிப்பை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

இந்தியா - சீனா இடையே  எல்லை பிரச்சனையில் கடந்த திங்கள் அன்று இரு தரப்பு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளார்கள் அதனை தொடர்ந்து நம் நாட்டின் பல இடங்களிலும் சீன பொருட்களை வியாபாரம் செய்யமாட்டோம் என வணிகர்களும், சீன ஆப்களை போனில் அன் இன்ஸ்டால் செய்தும் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், டிக்டாக் உள்ளிட்ட பல சீன தயாரிப்பு செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்க, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தகவலியல் மையம் சுற்றறிக்கை அனுப்பியதாக ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

ஆனால் அந்த அறிக்கை பொய்யானது என மத்திய பத்திரிகை தகவல் மையம் அளித்துள்ள விளக்கத்தில், மேற்கண்ட கூற்றுடன் பகிரப்படும் அறிக்கை போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அப்படி எந்த உத்தரவும் தேசிய தகவலியல் மையம் அளிக்கப்படவில்லை என்றும் தெளிவு படுத்தியது

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback