FACT CHECK:ஜூன் 17 ம் தேதிக்கு மேல் ஊரடங்கு நீட்டிக்க 95% வாய்ப்பு என பரவும் செய்தியின் உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஜூன் மாதம் 17- ம் தேதிக்கு மேல் ஊரடங்கு நீடிக்க 95% வாயப்புகள் அதிகம் உள்ளது.பொதுமக்கள் தங்களுக்கு தேவையான களை முன்னதாகவே வாங்கி வைத்துக் கொள்ளவும் தமிழக முதல்வர் அறிவிப்பு என்று ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த புகைப்படம் போட்டோஷாப் மூலம் எடிட்டிங் செய்யப்பட்டது.
அந்த செய்தி ஒரு மொட்டை கடுதாசி போல் உள்ளது
யார் ? எந்த செய்தி நிறுவனம், என்று கூட இல்லை
சென்னைக்கு உள்ளே செல்லவும் சென்னையிலிருந்து வெளியே வரவும் தடை செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கூட சென்னைக்கு செல்ல இ-பாஸ் தடை செய்யப்பட்டுள்ளது.
சிலர் இது போன்ற விஷயங்களை வைத்து மக்களுக்கு முன்னறிவிப்பு செய்கிறேன் என்ற பெயரில் பொய்யான தகவல்களையும் மக்களுக்கு மத்தியில் பயத்தையும் ஏற்படுத்துகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி