சென்னையில் மீண்டும் ஊரடங்கு இல்லை - இபாஸ் நிறுத்தப்படவும் இல்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
அட்மின் மீடியா
0
சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும் சென்னையில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதே போல, சென்னைக்கு இ-பாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலும் உண்மையில்லை என்றும் தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் ஊரடங்கை முழு அளவில் செயல்படுத்தக் கோரிய வழக்கு விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்