Breaking News

பத்திரப்பதிவுக்காக செல்பவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

அட்மின் மீடியா
0
ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பத்திரப்பதிவுக்காக செல்பவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்லும்போது இ-பாஸ் தேவை என தமிழக அரசு அறிவித்திருந்தது. 

தற்போது பத்திரப்பதிவுக்காக ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வோருக்கு இ-பாஸ் தேவையில்லை எனவும் பத்திரப்பதிவு டோக்கனையே  அந்த டோக்கனை ஆதாரமாகவும் திரும்பி வரும்போது பத்திரப்பதிவு செய்ததற்கான ரசீதையும் ஆதாரமாக காண்பித்து அவற்றை இ-பாஸ் போல பயன்படுத்திக்கொள்ளலாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback