Breaking News

பப்ஜி வீடியோ கேம் விளையாடுவது ஹராம்.... மதினா தலைமை இமாம் ஃபத்வா

அட்மின் மீடியா
5
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பப்ஜி விளையாட்டை  விளையாடுவது ஹராம் என்று ஃபத்வா கொடுக்கப்பட்டுள்ளது  என்று  ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி உண்மைதான்


மதினாவில் உள்ள இஸ்லாமிய கல்லூரியின் பேராசிரியரும், மதினாவில் உள்ள நபி ஸல் அவர்களின் பள்ளிவாசலான மஸ்ஜித் நபவி மற்றும் மஸ்ஜித் குபா வின் தலைமை இமாம் அவர்கள் பப்ஜி வீடியோகேம் விளையாடுவது ஹராம் என்று  ஃபத்வா கொடுத்துள்ளார்கள்.

காரணம் அந்த விளையாட்டில் இஸ்லாம் தடுத்த விஷயங்களை விளையாட்டு என்ற பெயரில் செய்வது.

குறிப்பாக இறைவனுக்கு இணை வைப்பது அதாவது சக்திக்காக (சக்தி இல்லாத) சிலைகளை வணங்குதல் மேலும் பல்வேறு உயிர்களை கொல்லுதல்.  

இது போன்ற பல்வேறு விஷயங்களை விளையாட்டு என்ற பெயரில் நம் இளைஞர்கள் செய்துவருகிறார்கள். அதை தடுப்பதற்காக தான் இந்த ஃபத்வா கொடுக்கப்பட்டுள்ளது.

இது இந்த விளையாட்டிற்கு மட்டும் அல்ல இது போன்ற எத்தனை விளையாட்டுகள் உள்ளதோ அவை அனைத்திற்கும் சேர்த்துதான்.

நம் மார்க்கத்தில் விளையாடுவதற்கு தடை இல்லை  ஆனால் பொய்யான இணை கற்பிக்கக் கூடிய இறைவனை வணங்குவதற்கு தடையாக இருக்கும் அனைத்து விளையாட்டுகளும் ஹராம் தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்

 
அட்மின் மீடியாவின் ஆதாரம்.

Tags: FACT CHECK மார்க்க செய்தி

Give Us Your Feedback

5 Comments

  1. Replies
    1. ஆம் ....அந்த பத்வாவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளர்ர்கள் நன்றாக படியுங்கள்

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இந்த பதிவில் சிலைகளை வணங்குதல் என்று சொல்லியிருக்கிறீர்கள்.கேமில் அப்படியொரு சிலை வணக்கம் இருக்கிறதா?

    ReplyDelete