BREAKING NEWS: இந்தியாவில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு!மனிதர்களுக்கு சோதனை செய்ய அனுமதி
அட்மின் மீடியா
0
கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக பாரத் பயோடெக் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசிக்கு கோவாக்சின் (COVAXIN)என பெயரிடப்ட்டுள்ளது
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மனிதர்கள் மீதான கோவாக்சின் தடுப்பூசி சோதனை ஜூலை மாதம் தொடங்கப்படும். மனிதர்கள் மீது சோதனை செய்த பிறகு, அதன் அடிப்படையில் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகின்றது
கோவாக்சின் தடுப்பூசி இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி-NIV) உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்