Breaking News

விப்ரோ ஐடி நிறுவனத்தை கொரானா நோயாளிகளுக்காக மருத்துவமனையாக மாற்றிய அஜீம் பிரேம்ஜி

அட்மின் மீடியா
0
கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அஜீம் பிரேம்ஜியின் விப்ரோவின் புனே ஐடி நிறுவனம் 450 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


மகாராஷ்டிராவில் கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில்  விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி  கொரோனா வைரஸ் நெருக்கடியைச் சமாளிக்க மகாராஷ்டிரா அரசுக்கு உதவ முடிவு செய்து  புனேவில் உள்ள ஐடி நிறுவனத்தின் ஒரு பிரிவை 450 படுக்கைகள் கொண்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருத்துவமனையாக மாற்றியுள்ளார்.

விப்ரோவும் மகாராஷ்டிரா அரசும் புனேவில் உள்ள விப்ரோ ஐடி நிறுவனத்தை மருத்துவமனையாக மாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சுமார் ஒரு மாதத்தில் மருத்துவமனையாக மாற்றியுள்ளார். அஜீம் பிரேம்ஜி.

இந்த மருத்துவமனையில்  450 படுக்கை வசதி உள்ளது மேலும் 15 ICU  தீவிர நோயாளிகளின் பிரிவும்  உள்ளது. மேலும் ோயாளிகளின் உணவையும் விப்ரோ நிறுவனமே வழங்குகின்றது

மகாராஷ்டிர முதல்வர் வீடியோ கான்பரன்சிங் மூலம் கடந்த 11.06.2020 அன்று திறந்து வைக்கப்பட்ட பின்னர் விப்ரோ நிறுவனம் அதன் தரத்திற்கு பெயர் பெற்றது, அதே போல் மருத்துவமனையும்  பராமரிக்கப்படும். அதற்காக மாநில அரசு அவர்களை வாழ்த்துகிறது. என்று கூறினார்

முன்னதாக கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட நிதியாக ரூ .1,125 கோடியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.


மேலும் மருத்துவமனை திறப்பு விழா வீடியோ பார்க்க

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback