Breaking News

வீ ட்ரான்ஸ்ஃபர் இணையதளத்துக்குத் தடை இந்திய தொலைத்தொடர்புத் துறை அதிரடி

அட்மின் மீடியா
0
வீ ட்ரான்ஸ்ஃபர் இணையதளத்துக்குத் தடை இந்திய தொலைத்தொடர்புத் துறை அதிரடி




we Transfer பைல் ஷேரிங் சேவையை வழங்கும் இணையதளமாகும்.
இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி இரண்டு ஜிபி வரை இருக்கும் பைல்களை நாம்  எளிதில் அடுத்தவரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பமுடியும்.

மேலும் இது இலவசமாகும் இதற்க்கு என்று நாம்  தனியே பணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால் 2 ஜிபி-க்கு மேல் இருக்கும் பைல்களை நாம்  கட்டணம் செலுத்தி தான் அனுப்ப முடியும்.

இந்த நிலையில் தான் தேசிய நலன் மற்றும் பொதுநலன் கருதி இந்த இணையதளம் தடை செய்யப்படுவதாக தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், அரசாங்கம் இதை தடை செய்வதற்கான காரணத்தை இன்னும் முழுமையாகத் தெரிவிக்கவில்லை.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback