Breaking News

பயிற்சி விமானம் விபத்து தமிழக பெண் விமானி 20 வயது அனிஸ் பாத்திமா உயிரிழந்தார்

அட்மின் மீடியா
0
ஒடிசாவில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் தமிழகத்தை சார்ந்த பயிற்சி விமானி உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்கள்

ஒடிசா மாநிலத்தில் உள்ள கங்காதஹாத் விமான பயிற்சி வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். 

இதில் பயிற்சி விமானத்தில் தமிழகத்தை சார்ந்த அனிஷ் ஃபாத்திமா மற்றும் பீகாரை சார்ந்த கேப்டன் சஞ்ஜீத் குமார் ஆகியோர் விமானத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்துள்ளனர். 

இந்த நிலையில், பயிற்சி விமானம் எதிர்பாராத விதமாக அங்குள்ள கங்காதஹாத் பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தமிழக பயிற்சி விமானி அனிஷ் பாத்திமா, பீகாரை சார்ந்த கேப்டன் சஞ்ஜீத் குமார் உயிரிழந்ததார்கள்

இருவரின் உடலும் அங்குள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா(20) என்பதும், இவர் சென்னை அருகே உள்ள பொழிச்சலூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback