11-ம் வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் புதிய பாடத்தொகுப்பு அறிமுகம்: உரிய அனுமதியைப் பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது; பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அட்மின் மீடியா
0
11-ம் வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் புதிய பாடத்தொகுப்பு அறிமுகம்: உரிய அனுமதியைப் பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
11-ம் வகுப்பில் இதுவரை அமலில் இருக்கும் 600 மதிப்பெண்கள் கொண்ட பாடத்தொகுப்புக்கு பதிலாக இந்த ஆண்டு முதல் 500 மதிப்பெண்கள் கொண்ட புதிய பாடத்தொகுப்பானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய பாடத்தொகுப்பின் கீழ் மாணவர் சேர்க்கையை முதன்மை கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெறாமல் 11-ம் வகுப்பில் புதிய
பாடத்தொகுப்பிற்கு மாணவர் சேர்க்கையை நடத்த கூடாது என தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்