Breaking News

FACT CHECK அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் தினமும் மணி அடிக்கும் குரங்கு வீடியோ உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் தினமும் பூஜை நேரத்தில் மனிதனால் அசைக்க முடியாத ஆலய மணியை அடிக்கின்றது இந்தக்குரங்கு என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


அந்த சம்பவம் தற்போது அயோத்தி ராமர் கோவிலில் நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

ஆனால் அந்த சம்பவம் கடந்த 10.09.2018 அன்று கர்நாடகாவில் உள்ள தேவராயணாதுர்கா கோவிலில் நடந்தது என ஒரு வீடியோவை மஞ்சு நாத் என்பவர் கர்நாடகாவில் உள்ள தேவராயணாதுர்கா மலைக் கோவிலில் குரங்கின் நடவடிக்கை என தனது யூடிப்பில் பகிர்ந்துள்ளார்

அந்த வீடியோ பலரும் அங்கு நடந்தது, என்றும் இங்கு நடந்தது என்றும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback