BREAKING NEWS: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 15ம் தேதி தொடங்கும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இன்று 19.05.2020 செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஜூன் 1ம் தேதி நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு அதற்க்கு பதில் ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஜூன் 15ந் தேதி பத்தாம்வகுப்பு மொழித் தேர்வு
ஜூன் 17ந் தேதி ஆங்கில பாடத் தேர்வு நடைபெறும்
ஜூன் 19ந் தேதி கணிதப்பாடத்திற்கு தேர்வு நடைபெறும்
ஜூன் 20ந் தேதி மொழிப்பாடத்திற்கு தேர்வு நடைபெறும்
ஜூன் 22ந் தேதி அறிவியல் பாடத்திற்கு தேர்வு நடைபெறும்
ஜூன் 24ந் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்
விடுபட்ட 11ம் வகுப்புக்கான தேர்வு ஜூன் 16ந் தேதி நடைபெறும்
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு