டெல்லியிலுள்ள தப்லீக் ஜமாத்தினர் தமிழகம் வர எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
அட்மின் மீடியா
0
டெல்லியில் உள்ள தமிழகத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினரை மீட்டுவர தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் சம்மந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி தப்லிக் மாநாடுக்கு சென்றவர்கள் ஊரடங்கு காரணமாக அங்கேயே சிக்கி கொள்ள நேர்ந்தது அவர்களை டெல்லியில் தங்க வைக்கபட்டுள்ளார்கள்
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினரை தமிழகத்திற்கு அழைத்துவர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச. உமர் பாரூக் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வ்ழக்கறிஞர் அஜ்மல் கான் அவர்கள் ஆஜாராகி கொரானா பரிசோதனை செய்து அவர்களுக்கு கொரானா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் அவர்களை மீட்க வில்லை மேலும் அவர்கள் தமிழகம் திரும்ப ஆகும் செலவை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றார்கள் எனவே அவர்களை தமிழகம் வர உரிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசு அவர்களை விரைவாக மீட்டுக் கொண்டு வருவதற்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பதை, எழுத்துபூர்வமாக மே 12-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்
Tags: மார்க்க செய்தி முக்கிய செய்தி