வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது மனித உரிமை ஆணையம் வழக்குத் தொடர்ந்துள்ளது
அட்மின் மீடியா
0
வாணியம்பாடியில் பழக்கடைகளை தள்ளிவிட்ட நகராட்சி ஆணையர் மீது மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.
வாணியம்பாடி பகுதியில் வண்டிக்கடை வியாபாரிகள் இயல்புநிலை திரும்பிவிட்டதாக எண்ணி கடைகளை திறந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து அந்த பகுதிக்கு விரைந்த நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் அங்குள்ள பழ வண்டிகளில் இருந்த பழங்களை தூக்கி எறிந்தும், பழ தட்டுகளை கவிழ்த்துவிட்டும் அவர்களை கடைகளை திறக்கக் கூடாது என்று கண்டித்திருக்கிறார்.
இந்நிலையில் அவர் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததுள்ளதுடன் பாதிக்கப்பட்ட வியாபாரிகளை நேரில் சந்தித்து இழப்பீட்டையும் வழங்கினார்
ஆனாலும் ஆணையரின் இந்த செயலை கண்டித்து மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து அவர்மீது வழக்கு தொடர்ந்துள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து வாணியம்பாடி நகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென மாநில மணித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
Tags: முக்கிய செய்தி