Breaking News

எந்தெந்த கடைகள் திறக்க அனுமதி முழு விவரம்: தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழக அரசு அறிவிப்பு தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 





சென்னையில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்படுவதற்கு  தடை

மதுகடைகள் இயங்க தடை.

தங்கும் விடுதிகள், தங்கும் ஹோட்டகள் மற்றும் ரிசார்ட்டுகள் போன்றவை செயல்பட தடை.

மாநிலங்களுக்கிடையேயான பொதுமக்கள் போக்குவரத்துக்கு தடை 


அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் சென்னையில் அனுமதிக்கப்படும்

சென்னையில் அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.


சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த சார்ந்த நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

பிளம்பர், எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோர் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம்.

கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில் அப்பணிகளுக்கு அனுமதிக்கப்படும்.

மாநகராட்சி , நகராட்சிக்கு வெளியே அனைத்து ஆலைகள் 50 % பணியாளர்களுடன் இயங்கலாம்.

15 ஆயிரம் மக்கள் கொண்ட பேரூராட்சிகளில் , ஜவுளி நிறுவனங்கள் 50 % ஆட்களுடன் செயல்படலாம்.

ஐ.டி நிறுவனங்கள் 50 சதவிகிதம் ஊழியர்களுடன் பணியாற்றலாம்.

சென்னையில் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.

மேலும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.


1. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள்.

2. வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

3. திரையரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.

4. அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

5. பொதுமக்களுக்கான விமான, ரயில், பொது பேருந்து போக்குவரத்து.

6. டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா

7. மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து.

8. மாநிலங்களுக்கு இடையேயான பொதுமக்கள் போக்குவரத்து.

9. தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.

10. இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

11. திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.


அரசு வழங்கியுள்ள இந்த நடைமுறைகளைப் பின்பற்றி, மாவட்ட ஆட்சியர்கள் / சென்னை மாநகர ஆணையர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, தொழிற்சாலைகளுக்குத் தக்க அனுமதி வழங்கி, 6.5.2020 முதல் தொழிற்சாலைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

நோய்த் தொற்றின் பரவலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நோய்த் தொற்று குறையக் குறைய, தமிழ்நாடு அரசு மேலும் பல தளர்வுகளை அறிவிக்கும்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஜெயலலிதாவின் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள், முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தமிழக  முதல்வர் பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.



மேலும் முழு விவரங்களுக்கு


https://drive.google.com/file/d/1QfNQbpsjGkbaObRb_uf26O2aerXDo1PP/view?usp=sharing


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback