Breaking News

FACT CHECK: ராமநாதபுரத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் இந்து கோவிலா ? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் மிகவும் பழமைவாய்ந்த சிவன் கோயிலை முஸ்லீம் பள்ளிவாசலாக மாற்றப்பட்டிருக்கு. அறநிலைத்துறை உதவியுடன் இந்த அவலம் நிகழ்தப்பட்டிருக்கு. நம் இந்துக்கோவில்களை அறநிலைத்துறையிடமிருந்து மீட்க்கவில்லையென்றால். மீண்டும் முஸ்லீம்களிடமும், கிருஸ்துவர்களிடமும் அடிமைபடுத்தப்படுவோம். இனியும் இந்துக்கள் கண்விழிக்கவில்லையென்றால் இந்து ஆலயங்களையும், இந்து மக்களையும் காப்பாற்றமுடியாது. என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்




அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நடுத்தெருவில் அமைந்துள்ள பள்ளிவாசல் அது மேலும் 17ம் நூற்றாண்டில் கிழவன் சேதுபதி காலத்தில், அமைச்சராக இருந்த வள்ளல் சீதக்காதி திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டியுள்ள பள்ளிவாசல் அது, இஸ்லாமிய அமைச்சர் சீதக்காதிக்கும், இந்து மன்னர் சேதுபதிக்கும் இடையே இருந்த நட்பு மதம் தாண்டியது என்று கூறபடுகின்றது

மேலும் சீதக்காதி எழுப்பியுள்ள ஜும்மா பள்ளிவாசலின் சிறப்பு  என்னவென்றால் கோயில்களில் உள்ள தூண்கள் , மற்றும் பல இடங்களில் சிலைகள் செதுக்கப்ட்டு இருக்கும். இது பள்ளிவாசல் என்பதால், ஒவ்வொரு தூணிலும் பூ அலங்காரம் செதுக்கப்பட்டுள்ளது. 

திராவிட கட்டிடக்கலை என்பது அனைத்து மக்களுக்கும் சார்ந்தது என்பதையே இந்த பள்ளிவாசல் கட்டிடம் காட்டுகின்றது

மேலும் ஐந்து வாசல்களை கொண்டதாகவும் சுமார் மூநூறு பேர் தொழுகை செய்யும் விதத்தில் அந்த பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது.


அட்மின் மீடியா ஆதாரம்



அட்மின் மீடியா ஆதாரம்


அட்மின் மீடியா ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback