உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
உலக சுகாதார நிறுவனத்துடனான தொடர்பை துண்டித்துக்கொள்வதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு உதவுவதாக புகார் கூறி வந்த நிலையில் தற்போது WHO லிருந்து வெளியேறியது அமெரிக்கா
உலகிற்கு கொரானா வைரஸ் குறித்த பதில்கள் தேவை. எங்களுக்கு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சீனா சரியாக தெரிவிக்கவில்லை என்றும், "உலகத்தை தவறாக வழிநடத்த" சீனா WHO க்கு அழுத்தம் கொடுத்ததாகவும் கூறினார்.
இதுவரை உலக சுகாதார மையத்திற்க்கு அளித்த நிதியை உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளில் உள்ள சுகாதார தேவைக்கு தர இருக்கின்றோம் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்
Tags: வெளிநாட்டு செய்திகள்