வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் பணியிடை நீக்கம்: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை
அட்மின் மீடியா
0
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளிலிருந்து பழக்கூடைகளையும் காய்கறிகளையும் நகராட்சி கமிஷனர் சிசில் தாமஸ் வீதியில் தூக்கி வீசினார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது மேலும் பலரும் அதற்க்கு கண்டனம் தெரிவித்தார்கள் உடனடியாக தன் தவறுக்கு வருத்தம் தெரிவித்து அந்த வியாபாரிகளை சந்தித்து மன்னிப்பு கேட்டு நிவாரணம் வழங்கினார்
மேலும் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து நகராட்சி கமிஷனர் மீது வழக்குப் பதிந்தது குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நகராட்சி நிர்வாக ஆணையருக்கும் நகராட்சி கமிஷனருக்கும் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியது
இந்நிலையில் அவர் கமிஷனர் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு