Breaking News

FACT CHECK: இஸ்ரேலில் கொரானாவை விரட்ட உடலில் சிப் பொறுத்துகின்றார்களா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  இஸ்ரேல் நாட்டில்  குழந்தைகளுக்கு உடலில் மைக்ரோசிப் பொருத்த பிரதமர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். என்று  ஒரு புகைப்படத்தை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?
 

உடலில் மைக்ரோ சிப் பொருத்தப்படும் என்ற செய்தி பொய்யானது மிகைப்படுத்தப்பட்ட துமாகும்.


உண்மை இதுதான் கொரானா பாதித்தவர்கள் பயணித்த இடங்களில் யாரெல்லாம் இருந்தார்கள் என்று கண்டறிய செல்போன் சிக்னல் டிராக்கிங் என்கிற திட்டத்தை இஸ்ரேலிய அரசு பயன்படுத்தி வருகின்றது


அதாவது கொரானா பாதித்த நபரின் அருகில் குறிப்பிட்ட தூரம் வரை யாரெல்லாம் இருந்தார்கள் என்று அறிய செல்போன் சிக்னல் தகவல்களை சேகரித்து அதன் மூலம் அந்தந்த நபர்களுக்கு தொடர்புகொண்டு தனிமைபடுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தவுள்ளதாக  தெரியவந்துள்ளது.


ஆனால் இதை செயல்படுத்த எதிர்ப்புகளும் அந்நாட்டில் கிளம்பிள்ளது. தனிமனித தகவல்கள் கண்கானிக்கபடுகின்றது என்கிற குற்றாச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால் அதிககாரிகள் இதைபற்றி குறிப்பிடும் போது 60 நாட்களுக்கு பிறகு இந்த தகவல்கள் அழிக்கப்ப்ட்டுவிடும்  என்று கூறியுள்ளனர்.


மேலும் நாம் தேடியவரை கொரானாவை விரட்ட உடலில் சிப் வைக்கின்றார்கள் என்று எந்த செய்தியின் கிடைக்கவில்லை.


மேலும் அது போல் நாட்டுமக்கள் உடலில் சிப் வைப்பது என்பது சாதாரண காரியமில்லை, மேலும் அப்படியே அது போல் சிப் வைக்கவேண்டும் என்றால் கூட நடைமுறையில்  சுமார் பல மாதங்கள் ஏன் ஆண்டுகள் கூட ஆகலாம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்




எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback