Breaking News

அமீரகத்தில் உள்ள இந்தியர்களே உங்கள் விசா காலம் முடிந்துவிட்டதா? உங்கள் மொபைலில் சரிபார்ப்பது எப்படி?

அட்மின் மீடியா
0
உலகமெங்கும் கொரோனாவின் பாதிப்பையொட்டி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது இதனால் பலர் பல நாட்டிலேயே முடங்கி போயுள்ளார்கள்



அமீரக குடியிருப்பாளர்கள், வேலை தேடி விசிட்டில் வந்தவர்கள், சுற்றுலா விசாவில் வந்தவர்கள் என அனைவரும்  வீட்டிற்குள்ளேயே முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதையடுத்து மேலும் இவர்களுடைய விசா காலமும் முடிவடந்து விட்டிருக்கும் இதனால் பலரும் ஒரு வித அச்சத்துடனே இருந்தார்கள்

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில், அமீரகத்தில் காலாவதியாகக் கூடிய அனைத்து ரெசிடென்ஸ் விசாக்கள், நுழைவு அனுமதி மற்றும் எமிரேட்ஸ் ஐடிகளின் செல்லுபடியை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிப்பதாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. 



அமீரக அரசாங்கம் அமீரக குடியிருப்பாளர்கள், வேலை தேடி விசிட்டில் வந்தவர்கள், சுற்றுலா விசாவில் வந்தவர்கள் என அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதி வரையிலும் அமீரகத்தில் தங்கி கொள்ளவும் அனுமதி அளித்தது அதாவது விசா காலம் காலாவதியானால் அவற்றை புதுப்பிக்க வேண்டியதில்லை, விசா செயல்முறை தானாகவே நீட்டிக்கப்படும் 

உங்கள்  விசா காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்வதற்காக இரண்டு அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் தங்களின் விசா எண், முதல் பெயர், நேசனாலிட்டி, பிறந்த தேதி போன்ற அடிப்படை தகவல்களை பதிவிடுவதின் மூலம்,  கொடுக்கப்பட்ட நபரினுடைய விசாவின் தற்போதய நிலையை தெரிந்து கொள்ளலாம் 







அது சம்மந்தமான ஒரு செயலியும் உள்ளது

ஆன்ராய்ட் போன் 



ஆப்பிள் போன் 




மேற்கண்ட முறையில் உங்கள் விசா காலத்தை தெரிந்து கொள்லலாம்

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback