Breaking News

பீகாரில் இந்துவை பலியிட்டால் மசூதி சக்தியாக மாறும் என்று பலியிட்டார்களா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஒரு இந்துவை பலியிட்டால் மசூதி சக்திவாய்ந்ததாக மாறும் எனற நம்பிக்கையில் சிறுவனை பலியிட்ட இஸ்லாமியர்கள் என்று ஒரு செய்தி ஒரு  சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 


யாரும் நம்ப வேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன

பீகாரில் உள்ள கோபால் கஞ்ச்  என்ற பகுதியில் ஒரு மசூதி கட்ட முஸ்லிம்களால் ஒரு இந்து ரோஹித் என்ற  சிறுவனை பலியிட்டதாகக் கூறப்படும் செய்தியினை தமிழில்பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் ஆனால் அந்த செய்தி போலியானது மற்றும் கற்பனையானது 

அந்த சம்பவத்திற்க்கும் இஸ்லாமியர்களுக்கும்  சம்மந்தமில்லை என்றும்

அந்த சிறுவன் ரோஹித் அருகில் உள்ள ஆற்றில் குளிக்கும் போது அங்கு நீரில் முழ்கி இறந்துள்ளான் என்றும்


இது குறித்து காவல்துறை டிஜிபி பொதுமக்களுக்கு பேஸ்புக் லைவில் விளக்கம் அளித்துள்ளார்

மேலும் முதலில் நாம் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய மார்க்கத்தில் மனிதர்களை  பலி கொடுத்தல் என்பது கிடையவே கிடையாது. 

இஸ்லாம் தோன்றிய காலம் முதல் இதுவரை எந்த ஒரு மனித உயிரையும் இறைவனுக்காகவோ அல்லது வேறு எந்த ஒரு காரணத்துக்காகவும் உயிர் பலி கொடுத்ததும் இல்லை கொடுக்கப் போவதும் இல்லை.

ஒரு சிறுவன் ஆற்றில் மூழ்கி இறந்து போகிறான் அதை எவ்வாறு பலி கொடுத்தல் என்று சொல்ல முடியும்? 

ஆனால் சிலர் அந்த விஷயத்தை  மக்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்த இதுபோன்ற பொய்யான தலைப்புகளில் சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுகிறார்கள்

அட்மின் மீடியா ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback