Breaking News

சென்னையில் இருந்து டெல்லிக்கு ரயில் எப்போது? : முழுவிவரம்

அட்மின் மீடியா
0
டெல்லியில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில் மே 13-ம் முதல் இயக்கப்பட உள்ளது.  ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை இந்த ரயில் இயக்கப்படும். 





டெல்லி நிலையத்திலிருந்து கிளம்பும் இந்த ரயில்கள் நாட்டின் 15 முக்கிய நகரங்களை இணைக்கும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட உள்ளது.

மேலும் இந்த ரயில்கள் டெல்லியில் இருந்து 

ஹவுரா, 

பாட்னா, 

புவனேஷ்வர், 

செகந்திராபாத், 

பெங்களூரு,

சென்னை, 

திருவனந்தபுரம், 

மும்பை சென்டிரல், 

அகமதாபாத் 

உள்ளிட்ட நாட்டின் பதினைந்து நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளது. 

டெல்லி  ரயில்  விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், போபால், ஜான்சி, ஆக்ரா போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும்  பயணிகள் ரயில் இயக்கம் தொடர்பான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் 

சுகாதாரத்துறையின் ஆலோசனைகளை பின்பற்றி ரயில்களை இயக்கிட வேண்டும்

பயணச் சீட்டு உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் மட்டுமே ரயில்களில் அனுமதிக்கப்படுவார்கள்.டிக்கெட் இல்லாத யாரும் ரயில் நிலையத்திற்குள் வர முடியாது.

அவர்களுக்கு முழுமையான பரிசோதனை நடத்தப்பட்டு பின்னர் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர் கட்டாயமாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு ரயில் பயணிகளும் சமூக இடைவேளியை பின்பற்ற வேண்டும்.

ரயில் நிலையத்திற்கு வரும் போது கொரோனா அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்று சோதனை செய்த பிறகு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவிதம் கட்டணத்தில் பிடித்தம் செய்யப்படும்.

பயணிகள் சிறப்பு ரயிலில் தட்கல் முன்பதிவு கிடையாது.

ரயிலில் வழங்கப்படும் உணவிற்கான தொகை டிக்கெட்டுடன் வசூலிக்கப்படாது

ஏசி பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு படுக்கை விரிப்பு மற்றும் கம்பளி போர்வை வழங்கப்படாது.

ரயில் நிலையத்தின் நுழைவாயிலிலும், ரயில் பெட்டிகளிலும் பயணிகள் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்துக கொள்ள வேண்டும்.

பயணிகள் எந்த மாநிலங்களுக்கு பயணம் செய்கிறார்களோ அங்கு கொரோனா தொடர்பாக விதிக்கப்பட்டு இருக்கும் விதிமுறைகள், அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது


மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து புது டெல்லிக்கு இயக்கப்படும் ரயில், மே 15-ம் தேதி முதல் இயங்கும். இந்த ரயிலானது ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும்.


டெல்லி நிலையத்திலிருந்து கிளம்பும் இந்த ரயில்கள் நாட்டின் 15 முக்கிய நகரங்களை இணைக்கும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட உள்ளது.

டெல்லி  ரயில்  விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், போபால், ஜான்சி, ஆக்ரா போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும். என் அறிவிக்கபட்டுள்லத



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback