Breaking News

பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் : தலைமை காஜி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
கொரானா ஊரடங்கு காரணமாக  ரம்ஜான் தொழுகையை வீடுகளிலேயே தொழுது கொள்ளுமாறு தமிழக அரசின் தலைமை காஜி இஸ்லாமியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



தமிழக அரசின் தலைமை காஜி சலாவூதீன் அய்யூப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு அமலில் உள்ளதால் ரம்ஜான் சிறப்புத் தொழுகையை பள்ளிவாசல்களிலோ, மைதானங்களிலோ நடத்துவதற்கு இந்தாண்டு சாத்தியமில்லை. எனவே எதிர்வரும் பெருநாள்  பண்டிகை அன்று, இஸ்லாமியர்கள் அவரவர் வீடுகளிலேயே ரம்ஜான் சிறப்புத் தொழுகையை நடத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.





Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback